×

வெடிகுண்டு புரளி விடுத்தால் ரூ.1 லட்சம் அபராதம்: விமான பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் பல்வேறு விமானங்களுக்கு 666 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்த ஆண்டில் மொத்தம் 999 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து விமான பாதுகாப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. விமான பாதுகாப்பு சட்டம் 29 ஏ மற்றும் 30 ஏ என்ற இரண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டத்தின் படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனி நபர்கள் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்க விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், இந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post வெடிகுண்டு புரளி விடுத்தால் ரூ.1 லட்சம் அபராதம்: விமான பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...