×

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்: நாசா தகவல்

அமெரிக்கா: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில் மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதை அடுத்து இருவரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்தது. ஆனால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து புதிய விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி இருவரையும் அழைத்துவர நாசா திட்டமிட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ், புச் வில் மோர் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

The post சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்: நாசா தகவல் appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,Earth ,NASA ,USA ,International Space Center ,Veerangan ,Dinakaran ,
× RELATED விண்வெளி நிலையத்தில் சிக்கிய சுனிதா...