×

கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையயை வழங்கினார் துணை முதல்வர்

சென்னை: கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. முகாம் அலுவலகத்தில் வைத்து காசிமாவிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி, மித்ரா ஆகியோரும் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். ஆனால், எளிய பின்னணியில் உள்ள கேரம் வீரர்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த நிதியுதவியும் அறிவிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் சிங்கப்பூரில் நடைபெற்ற 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றார். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டது. தமிழக அரசு பரிசுத் தொகையாக குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற வீரர்களை அரசு பாராட்டி ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்க விஷயம். அப்போதுதான் இன்னும் பல வீரர்கள் உருவாகுவார்கள். அதே சமயம், செஸ் வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை, கேரம் வீரர்களுக்கும் அரசு கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கூறினார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேரம் விளையாட்டு வீராங்கனை காசிமாவிடம் ரூ.1 கோடிக்கான காசோலையயை துணை முதல்வர் வழங்கினார். அதுபோல் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

 

 

The post கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையயை வழங்கினார் துணை முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Karam Weerangana Kasima ,Chennai ,Tamil Nadu government ,Kasima ,Keram tournament ,Mithra ,Karam Weerangani ,Deputy Chief ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து...