×

லியோவில் நடிக்கிறேனா?: விஜய் சேதுபதி பதில்

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிக்கிறேனா என்பதற்கு விஜய் சேதுபதி பதில் அளித்தார். ‘லியோ’ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கையில் உடைந்த கூலிங் கிளாஸின் ஒரு பகுதியை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தார். அந்த கண்ணாடி ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டரின் கண்ணாடி என்பதால் நெட்டிசன்கள் ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தான் ரத்னகுமார் மறைமுகமாக கூறியதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ‘லியோ’ படத்தில் நான் நடிக்கவில்லை. தயவு செய்து இதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். ரத்னகுமார் எதற்காக அந்த கண்ணாடியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்று எனக்கு தெரியாது. ‘லியோ’ படத்தில் நான் நடிப்பதாக பல ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர், ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. அதனால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

The post லியோவில் நடிக்கிறேனா?: விஜய் சேதுபதி பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Chennai ,Vijay ,Ratnakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்