×

750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

 

மணிகண்டம், டிச.18: திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை பராமரிப்பு துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் மருத்துவர் கணபதிமாறன் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இம்முகாமினை இனாம் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளையம்மாள் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

முகாமில் சுமார் 750க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. ஸ்ரீரங்கம் உதவி இயக்குனர் மருத்துவர் கணபதி பிரசாத் மேற்பார்வையில் மருத்துவர் சுதா தலைமையிலான கால்நடை ஆய்வாளர்கள் குழு மற்றும் கால்நடை உதவியாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இனாம்குளத்தூர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Manikandam ,Inamgulathur Uratchi ,Trichy Manikandam Union ,Department of Veterinary Care ,Deputy Director ,Dr. ,Kanapitmaran ,Department ,of Veterinary ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை