×

தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

பேரவையில் கேள்வி நேரத்தின் போது சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் (திமுக) பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியை முன்னுரிமை அடிப்படையில் அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு். ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஏற்கனவே, 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் 2021-22ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை மாவட்டம் உள்பட எஞ்சிய மாவட்டங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்….

The post தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Government Medical Colleges ,Tamil ,Nadu ,Suframanian ,Citrus Block MLA BD ,Panneerselvam ,Dishagha ,Priority of Medical College ,Mayiladududwara District ,Tamil Nadu ,Minister ,Ma ,
× RELATED நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி