×

கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டில் மழைநீர் தேங்கிய பகுதியில் அதிமுக கவுன்சிலர் ஆய்வு

கோவில்பட்டி, டிச. 18: கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டு பகுதிகளில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலருமான கவியரசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து மின் மோட்டார் மூலம் வெளியேற்றி அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

The post கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டில் மழைநீர் தேங்கிய பகுதியில் அதிமுக கவுன்சிலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Govilpatty Municipality ,Kovilpatty ,Northern District Aditmuga Youth, Youth Excise ,Govayarasi Municipal Council ,Kadambur ,Raju ,MLA ,32nd Ward ,Kovilpatty Municipality ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும்...