×

அரசுப்பணி தேர்வில் 100க்கு 101 மதிப்பெண்: மபியில் வெடித்தது போராட்டம்

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வனம் மற்றும் சிறைத் துறைகளில் காலியாக உள்ள இடங்ளை நிரப்ப அம்மாநில தேர்வாணையம் கடந்த 13ம் தேதி தேர்வு நடத்தியது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் முதல் மதிப்பெண் பெற்றவர் 100க்கு 101.66 மதிப்பெண் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கமளித்த தேர்வாணையம், ‘‘தேர்வு முடிவுகள், நார்மலைசேஷன் செயல்முறையை பின்பற்றி வெளியிடப்படுகிறது. இதனால், முழு மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், பூஜ்ஜியத்திற்கு குறைவாகவும் மதிப்பெண் செல்ல வாய்ப்புண்டு. எனவே தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’’ என்றார். ஆனால் இதை ஏற்க மறுத்து தேர்வாளர்கள், தேர்வு வரலாற்றில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் நியாயமான விசாரணை கோரியும் இந்தூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராடிய மாணவர்கள், மாநில முதல்வர் மோகன் யாதவ்வுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

The post அரசுப்பணி தேர்வில் 100க்கு 101 மதிப்பெண்: மபியில் வெடித்தது போராட்டம் appeared first on Dinakaran.

Tags : state election commission ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் கேட்பாரற்று நின்ற காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்!!