×

மாமன்னன் ‘எம்சியூ’ படமா

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் தான் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்கள் வரும் என்றும் எனவே அவரது படங்களை எல்சியூ படங்கள் அதாவது லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும். ஹாலிவுட்டில் இந்த பாணி கடைபிடிக்கப்படுகிறது. பாலிவுட்டிலும் பதான் படம் மூலம் இந்த பாணி நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் லோகேஷ் தற்போது இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் கூட அவரது முந்தைய படங்களின் கேரக்டர்கள் இடம்பெற்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படமும் சினிமா யுனிவர்ஸ் படம் என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது இது எம்சியூ படம் (மாரிசெல்வராஜ் சினிமா யூனிவர்ஸ்) என்கிறார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டர் ‘மாமன்னன்’ படத்தில் இடம் பெற்று இருப்பதாக தெரிகிறது.

‘கர்ணன்’ படத்தில் லால் நடித்த எமராஜா என்ற தாத்தா கேரக்டரை ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ள வடிவேலு கையில் டாட்டூ குத்தி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து ‘மாமன்னன்’ படம் மாரி செல்வராஜ் சினிமா யுனிவர்ஸ் படம் என்று கூறப்படுகிறது. இது, ரசிகர்களுக்கு புது தகவலாக அமைந்துள்ளது.

The post மாமன்னன் ‘எம்சியூ’ படமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanakaraj ,LSU ,Lokesh Cinema Universe ,Hollywood ,Padhan ,Bollyawat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘லியோ’ படத்தில் வன்முறை காட்சிகள்...