×

6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மேல்முறையீடு

சென்னை: பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார். 2018 ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக டிவிட்டரில் அவதூறு கருத்து கூறியிருந்தார். இதையடுத்து, பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.

கனிமொழி தொடர்பான டிவிட்டர் பதிவு புகாரில் ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் எச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்குமாறு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அப்போது ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. ஹெச். ராஜா கருத்து பதிவு செய்யவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனவே, இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹெச். ராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் தண்டனையை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : BJP ,H. ,Chennai ,H. Raja ,Bharatiya Janata Party ,Tamil Nadu Co-ordination Committee ,king ,H. King ,
× RELATED அவதூறு வழக்கில் ஓர் ஆண்டு சிறை...