×

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அனைத்து கோயில்களும் மூடப்பட்டன: கோபுர தரிசனம் ெசய்யும் பக்தர்கள்

காஞ்சிபுரம்:   கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அனைத்து கோயில்களும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்பட பல கோயில்கள் மூடப்பட்டன. 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கோயில்களில் ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கவில்லை. ஆனால், வழக்கம்போல் சிவாச்சாரியார்கள் மூலம் ஐந்து கட்ட பூஜைகள், தினசரி வழிபாடுகள் தடையின்றி நடந்தது. சுவாமியை தரிசிக்க வந்தவர்கள் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள், பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….

The post கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அனைத்து கோயில்களும் மூடப்பட்டன: கோபுர தரிசனம் ெசய்யும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Gopura ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...