×

“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்” புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்” புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post “சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்” புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chennai Journalists Forum ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chennai Journalists' Forum ,Chennai Journalist Forum ,Dinakaran ,
× RELATED தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை...