×

அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து வாலிபரிடம் ரூ.2.6 லட்சம் பணம் பறிப்பு: ‘கில்லாடி’ பெண்கள் 3 பேர் சிக்கினர்

உசிலம்பட்டி: ஒரே வாலிபருக்கு அடுத்தடுத்து 2 பெண்களை திருமணம் செய்து அவரது குடும்பத்தினரிடம் பணம் பறித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாயி. இவர் தனது மகன் முருகனுக்கு (30) திருமணம் செய்வதற்காக, பெண் தேடியுள்ளார். அப்போது, புரோக்கர் என அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா (45), பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்று கூறி ஒரு பெண்ணை பெற்றோருடன் அழைத்து வந்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பின், முருகனுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த அக். 25ம் தேதி பூதிப்புரத்தில் திருமணம் நடந்துள்ளது. பின்னர், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர். மணப்பெண்ணின் தங்கை என கூறிய இளம்பெண் மட்டும் அங்கிருந்துள்ளார். திருமண ஏற்பாட்டிற்காக விஜயா ரூ.1.80 லட்சம் கமிஷன் பெற்றுச் சென்றார். திடீரென மணப்பெண்ணின் தங்கை என கூறியவர், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கூறியதால் மணப்பெண், முருகன் உள்ளிட்ேடார் காரில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, தங்கையுடன் மணப்பெண் மாயமானார். தகவலறிந்த விஜயா, மணப்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் ெசன்றிருக்கலாம் என்று கூறியதுடன், முருகனுக்கு வேறு பெண் பார்க்கலாம் என கூறி கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி (52) என்ற புரோக்கர் வாயிலாக, மற்றொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதற்கு காளீஸ்வரிக்கு ரூ.80 ஆயிரம் கமிஷன் பெற்றுள்ளார்.

தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி முதலிரவை தவிர்த்த மணப்பெண், மறுநாள் காலை மாயமானார். இதையறிந்த விஜயா விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த அருணாதேவி (38) என்ற பெண்ணை அழைத்து வந்துள்ளார்.  அவரது வயது கூடுதலாக இருக்கிறது என பெருமாயி கூறியபோது, அவர் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்றும், முருகனுக்கும் இருமுறை திருமணம் நடந்துள்ளதால் வேறு பெண் கிடைப்பது சிரமம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருமணத்திற்கு கமிஷனாக ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த பெருமாயி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்பேரில், பெருமாயி அழைத்ததால் விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகியோர் நேற்று பூதிப்புரம் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் போலி திருமணங்களை நடத்தி புரோக்கர் கமிஷன் என்ற பெயரில் பண மோசடி ெசய்யும் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மோசடி வழக்குப்பதிந்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகியோரை கைது செய்தனர். கும்பலை சேர்ந்த மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து வாலிபரிடம் ரூ.2.6 லட்சம் பணம் பறிப்பு: ‘கில்லாடி’ பெண்கள் 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Usilampatty ,Boothipurat ,Usilampatty, Madurai district ,Murugan ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...