×

இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு: சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டும் வழங்காததால், மீண்டும் அவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வீட்டுமனை இல்லாத 138 சலவை தொழிளாலர்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியாக நடத்தி வந்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்படோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டுமென கடந்த 2021ம் ஆண்டு மனு அளித்தனர்.

இதனை பரிசிலிளித்த மாவட்ட நிர்வாகம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டுமனை மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கக்கோரி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இலவச தொகுப்பு வீடு மற்றும் இலவச வீட்டுமனை கெங்கு தேவன் குப்பத்தில் வீட்டுமனை பட்டா வழங்க ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் உடனடியாக வீட்டுமனை மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி நேற்று மாவட்ட கலெக்டரிடம் 100க்கும் மேற்பட்ட சென்று மனு அளித்தனர்.

The post இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...