×

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள் : ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி : இலங்கை அதிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.டெல்லி வந்துள்ள இலங்கை அதிபரிடம், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்த கோரி அவர் கடிதத்தில் கூறியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள்.

மீன்பிடி படகுகளையும் இலங்கை படை கைப்பற்றுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறையில் உள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தையும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் மீட்க இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

The post இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அதிபரிடம் பேசுங்கள் : ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Tags : President ,Tamil Nadu ,Rahul Gandhi ,Union Government ,Delhi ,Opposition Leader ,Union External Affairs Minister ,S Jaishankar ,Lankan President ,Nadu ,Dinakaran ,
× RELATED பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான...