×

நூறு நாள் வேலை தொடர்ச்சியாக வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை-அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் அடுத்த புலிமேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எனும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கால்வாய்கள் தூர்வாருதல், குளங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதிகபட்சமாக 900 தொழிலாளர்கள் உள்ள ஊராட்சியில் தொழிலாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கபட்டு வேலை வழங்கபட்டு வருகிறது. முதல் குழுவுக்கு ஒருவாரமும், இரண்டாம் குழுவுக்கு அடுத்த வாரங்களிலும் வேலை வழங்கபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தோடு முதல் குழுவுக்கு வேலை முடிந்த  நிலையில் நேற்று முன்தினம் முதல் இரண்டாவது குழுவுக்கு வேலை வழங்க கோரி புலிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஊராட்சியில் முதல் குழுவில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கியதுபோல் இரண்டாவது குழுவை சேர்ந்த எங்களுக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிமுரளிதரன், துணை தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சலாவுதின் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் புதியதாக வேலைகள் தொடங்குவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து அனுமதிபெற்று அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியாக வேலை வழங்க நடவடிக்க எடுக்கபடும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை இரண்டு மணி நேரம் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. …

The post நூறு நாள் வேலை தொடர்ச்சியாக வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை-அணைக்கட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Padori Pavement Office ,Thaluka Vellore Union ,Puliemadu ,Osur ,
× RELATED குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை