×

அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அரியலூர், டிச. 16: அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக அதிகளவு மழை பெய்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி, மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று விளாங்குடி ஊராட்சி, அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி சாலையில் உள்ள விளாங்குடி ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர்வரத்து குறைந்த உடன் அணுகு சாலை அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மகிமைபுரம் கிராமத்தில் உள்ள கருங்காட்டு ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் நீரின் அளவு குறைந்தவுடன் இதனை விரைந்து சரிசெய் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். பின்னர் அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர்கோவில் வருவாய் கிராமத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொன்னேரி; மற்றும் கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்தேக்கங்களை பார்வையிட்டு நீர்தேக்கங்களின் மொத்த பரப்பளவு மற்றும் கொள்ளளவு, நீர்வரத்து விவரம், தற்போது வரையில் எவ்வளவு நீர் நிரம்பியுள்ளது என்பது குறித்த விவரம், இதன் மூலம் நீர்பாசன வசதி பெறும் கிராமங்களின் எண்ணிக்கை, உபரிநீர் வெளியேற்றப்படும் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டதுடன், நீர்வரத்தினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி, அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாண்டியன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Supervision Officer ,India ,Vijayaletshmi ,Officer ,Dinakaran ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...