×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 2 டிஎம்சி தண்ணீர் வந்தடைந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி. சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் 19ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், மறுநாள் 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை-தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. தொடக்கத்தில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடியாகவும், பின்னர் படிப்படியாக உயர்த்தி 220 கன அடி வரை உயர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது, இந்நிலையில, பூண்டி நீர்த்தேக்கம் மழையால் நிரம்பியதால் கண்டலேறு அணையில் நேற்று முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி இதுவரை 2 மில்லியன் கன அதாவது 2 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

 

The post கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : 2 TMC ,Kandaleru Dam ,Tamil Nadu ,Chennai ,Andhra Pradesh Government ,M. C. Yum ,TMC ,
× RELATED கண்டலேறு அணையில் இருந்து ஜீரோ பாயிண்டிற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு