×

சூதாட்ட கப்பலில் சோதனை கோவாவில் ஈடி அதிகாரிகள் மீது தாக்குதல்

பனாஜி: கோவாவில் சூதாட்ட கப்பலில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவாவின் பிரபல சூதாட்ட கப்பல்களுள் ஒன்று குரூஸ் கேசினோ. இந்த கப்பலில் நடத்தப்படும் சூதாட்டத்தில் பண மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 12ம் தேதி கப்பலில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் கப்பலின் மேலாளர், ஊழியர்கள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக பனாஜி காவல்நிலையத்தில் அமலாக்கத்துறையினர் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில் கேசினோ கப்பல் இயக்குநர் அசோக் வாடியா, மூத்த பணியாளர்கள் உள்பட சிலருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சூதாட்ட கப்பலில் சோதனை கோவாவில் ஈடி அதிகாரிகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : ED ,Goa ,Panaji ,Cruise Casino ,
× RELATED கோவையில் அண்ணாமலை கைது