×

ராகுல் யாத்திரையில் பங்கேற்றதால் ரெய்டு அமலாக்கத்துறை விசாரணையால் தொழிலதிபர், மனைவி தற்கொலை: மபி அரசியலில் பரபரப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் அஸ்தா நகரை சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் பர்மர். இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தியை சந்தித்து அவரது குழந்தைகள் நிதி உதவி அளித்தனர். இந்தநிலையில் பிரதான் மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சர் யுவ உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ரூ. 6 கோடி கடன் பெற்றது தொடர்பாக டிச.5ம் தேதி தொழில் அதிபர் மனோஜ் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது தொழில் அதிபர் மனோஜின் வாக்குமூலங்களை பதிவு செய்த அமலாக்கத்துறை அவரது வங்கி இருப்பில் இருந்த ரூ.3.5 லட்சத்தை முடக்கியது.

மேலும் 4 அசையா சொத்துகள் பற்றிய விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து விசாரணைக்கு அழைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மனோஜ் மற்றும் அவரது மனைவி நேகா ஆகியோர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ரூ.3.50 லட்சம் வங்கி கணக்கை மட்டும் முடக்கி விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்ததால் மனம் உடைந்து அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை தொடர்பாக தொழில் அதிபர் மனோஜ் எழுதிய கடிதத்தில், ‘எங்கள் தற்கொலைக்கு அமலாக்கத்துறை மிரட்டல், பா.ஜவின் தொந்தரவு தான் காரணம். ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எனது குழந்தைகளை தவிக்க விட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதை தொடர்ந்து மபி முதல்வர் மோகன் யாதவ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளதால் மபி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ராகுல் யாத்திரையில் பங்கேற்றதால் ரெய்டு அமலாக்கத்துறை விசாரணையால் தொழிலதிபர், மனைவி தற்கொலை: மபி அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Businessman ,Enforcement Directorate ,Rahul ,Bhopal ,Manoj Parmar ,Astha Nagar, Sehore district, Madhya Pradesh ,Rahul Gandhi ,India Unity Yatra ,Prime ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!