×

உபியில் வன்முறை நடந்த பகுதியில் 1978 கலவரத்தில் மூடப்பட்ட கோவில் திறப்பு

சம்பல்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி தொடர்பாக நடந்த வன்முறையில் 4 பேர் பலியானார்கள். அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் மசூதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கக்கு சராய் என்ற இடத்தில் கோட் கர்வி என்ற கோயில் 1978ல் நடந்த கலவரத்திற்கு பிறகு மூடப்பட்டது. இந்த கோயிலில் அனுமான் சிலை மற்றும் சிவலிங்கம் உள்ளது.

இந்தக் கோயில் குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ரஸ்தோகி சமூகத்தின் கோயில் என்று அழைக்கப்பட்டது. இந்த கோயிலை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க சப் கலெக்டர் வந்தனா மிஸ்ரா உத்தரவிட்டார். இதையடுத்து கோயில் திறக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகிலேயே ஒரு கிணறும் உள்ளது. அதையும் மீண்டும் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post உபியில் வன்முறை நடந்த பகுதியில் 1978 கலவரத்தில் மூடப்பட்ட கோவில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : 1978 riots ,UP ,Sambal ,Shahi Jama Masjid ,Uttar Pradesh ,Sambal district ,Kakku Sarai ,1978 ,Dinakaran ,
× RELATED சம்பல் வன்முறை சம்பவ வழக்கு: சமாஜ்வாதி...