- தூத்துக்குடி ரயில் நிலையம்
- தெற்கு
- தூத்துக்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தென்கிழக்கு
- வட கிழக்கு
- நெல்லா
- தூத்துக்குடி
- தென்காசி
- தூத்துக்குடி
- தெற்கு ரயில்வே
- தின மலர்
தூத்துக்குடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரயில் (06667) ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 08.25 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் பயணிகள் ரயில் (06847) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில் இன்று மாலை 5.15 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.25 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனமழையால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தேங்கிய மழைநீர்; 5 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்.! தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.