டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தாழ்வு பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.