×

வங்கத்தை ஒயிட்வாஷ் செய்த வெ.இ

வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேசம் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் செயின்ட் கிட்சில் நடந்தது. முதலில் விளையாடிய வங்கம் 50ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 321ரன் குவித்தது. அந்த அணியின் சவுமியா சர்கார் 73, கேப்டன் மிராஸ் 77, ஆட்டமிழக்காமல் மகமதுல்லா 84, ஜாகர் அலி 62ரன் எடுத்தனர். அதனையடுத்து விளையாடிய வெ.இ 45.5ஓவரில் 6விக்கெட்களை இழந்து 325ரன் எடுத்து இலக்கை கடந்தது.

அதனால் வெ.இ 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணியின் கேசி கார்டி 95ரன் எடுக்க, அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசிய அமிர் ஜாங்கூ 104, குகேஷ் மோதி 44 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை வெ.இ 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வங்கத்தை ஒயிட்வாஷ் செய்தது.

The post வங்கத்தை ஒயிட்வாஷ் செய்த வெ.இ appeared first on Dinakaran.

Tags : West Indies ,Bengal ,Bangladesh ,St. Kitts ,Soumya Sarkar ,Miraz ,Mahmudullah ,Dinakaran ,
× RELATED டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி! 3வது போட்டியிலும் வெ.இ. படுதோல்வி