செயின்ட்கிட்ஸ்: வெஸ்ட்இண்டீஸ்- வங்கதேசம் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்ய முதலில்பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 321ரன் குவித்தது. அதிகபட்சமாக மகமதுல்லா 84, கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 77, சவுமியா சர்கார் 73, ஜாக்கர் அலி 62 ரன் அடித்தனர்.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீசி கார்டி 95, அறிமுக வீரர் அமீர் ஜங்கு நாட் அவுட்டாக 83 பந்தில் 104, குடாகேஷ் மோதி 44 ரன் விளாசினர். 45.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 325ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது. வங்கதேசம் ஒயிட் வாஷ் ஆனது. அமீர் ஜங்கு ஆட்டநாயகன், ஷெர்பேன் ருதர்போர்ட் தொடர் நாயகன் விருது பெற்றனர்.
The post 3வது ஒருநாள் போட்டியில் 321 ரன்னை சேசிங் செய்து வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: வங்கதேசம் ஒயிட்வாஷ் appeared first on Dinakaran.