- திருவெறும்பூர் நாவல்பட்டு
- திருச்சி
- திருவெறும்பூர் நாவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- திருச்சி மாவட்டம்…
திருச்சி. டிச:13: ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இன்று திருவெறும்பூர் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இன்று திருவெறும்பூர் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார இன்று நடைபெறுகிறது. மேலும் நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100-ம், ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200-ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இச்சிகிச்சையானது ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்க்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்து கொண்டு பயன்பெறலாம் என துணை இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார். ேமலும் விவரங்களுக்கு 04312460695, 9443138139 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post திருவெறும்பூர் நவல்பட்டில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை appeared first on Dinakaran.