- கோடுச்சேரி
- காரைக்கால்
- சந்திரா பிரியங்கா
- சட்டமன்ற உறுப்பினர்
- காரைக்கால் மாவட்டம்
- ஓம்நகர்
- ஜெய் கணபதி நகர்
- தின மலர்
காரைக்கால்,டிச.13: கோட்டுச்சேரி பகுதியில் மழை பாதிப்புகள் சந்திரா பிரியங்கா எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோட்டுச்சேரி கொம்யூன் ஓம் நகர், ஜெய் கணபதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்கியிருப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சென்று பார்வையிட்டதுடன் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் மூலம் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு மழை நீர் வடிவதற்கான வழிவகை செய்ய உத்தரவிட்டார். இதனை எடுத்து மின்மோட்டார்கள் கொண்டு மழை நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சந்திர பிரியங்கா எம்எல்ஏ பேரிடர் காலங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறு தொடர் கனமழை மற்றும் புயல் பேரிடர்கள் ஏற்பட்டால் பள்ளி முகாம்களில் தங்குமாறும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
The post கோட்டுச்சேரி பகுதியில் மழைக்கு பலத்த சேதம் appeared first on Dinakaran.