×

சிவகிரி கடை வீதிகளில் நிறுத்தப்படும் பைக்குகளால் போக்குவரத்து பாதிப்பு அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எஸ்பிக்கு கடிதம்

சிவகிரி, டிச.13: சிவகிரி கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம், எஸ்பிக்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, மாவட்ட எஸ்பி சீனிவாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிவகிரி தேர்வுநிலைப் பேரூராட்சியில் பேருந்து செல்லும் சாலையான கீழரதவீதி, ராஜாஜி ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 4ம் தேதியன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அப்பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்பட்டு போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நலன் கருதி அப்பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிவகிரி கடை வீதிகளில் நிறுத்தப்படும் பைக்குகளால் போக்குவரத்து பாதிப்பு அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எஸ்பிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : administration ,SP ,Sivagiri shopping streets ,Sivagiri ,Municipality Executive Officer ,Venkatagobu ,District ,Srinivasan ,Sivagiri municipality administration ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை...