×

சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் நிலம் மீட்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வணிக மனை மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலில் பொது நல நிதியின் மூலம் புனரமைப்பு மேற்கொள்ளும் வகையில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடும் வகையில் உஸ்மான்கான் தெருவில் 520 சதுரடி கொண்ட வணிக மனையில் அமைந்துள்ள கட்டிடம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. இந்த இடம், சென்னை உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம். இந்த நிகழ்வின் போது கோயில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் மணி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sindathiripettai ,CHENNAI ,Nageshwari Amman ,Temple ,Sindathirippet ,Hindu Religious Endowments Department ,
× RELATED சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு...