×

இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாப பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்பதற்காக இரண்டு நாட்களுக்கும் மேலாக மீட்பு குழுவினர் போராடிய நிலையில் சிறுவன் உயிரிழந்தான். ராஜஸ்தானின் தவுசாவில் உள்ள காலிகட் கிராமத்தில் திங்களன்று மாலை 5வயது சிறுவன் ஆர்யன் எதிர்பாராதவிதமாக வயலில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 150 அடி ஆழத்தில் விழுந்த சிறுவனை மீட்க போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவனை மீட்க முதலில் கயிறு மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் இது தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து போர்வெல்லுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 56 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டான். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு ஆர்யனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

The post இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Adalla ,Jaipur ,Adaldula ,Rajasthan ,Aryan ,Caligat ,Dausa, Rajasthan ,
× RELATED ஜெய்பூர் பெட்ரோல் பங்க் முன் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு