×

சமத்துவம்தான் சனாதன தர்மம்: கவர்னர் புதுவிளக்கம்

நாகர்கோவில்: சமத்துவம் என்பதே சனாதன தர்மம் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அகிலதிரட்டு அம்மானை உதய தின விழாவை முன்னிட்டு, குமரி மாவட்டம் தாமரைகுளம் பதியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து, அய்யா வழி ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சாமிதோப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வைகுண்ட அவதாரத்தை உலகிற்கு பறைசாற்றியவர்களுக்கு கவர்னர் ரவி, விருது வழங்கியும், அகில திரட்டு அம்மானை நூலை வெளியிட்டும் பேசியதாவது: மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் அய்யா வைகுண்டர். சனாதனத்திற்கு ஆபத்து ஏற்படும் போது நாராயணர் அவதரிக்கிறார் என கூறப்படுகிறது. நம்மில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் கிடையாது. சனாதனம் என்றால் சமத்துவம். சமத்துவம் என்றால் சனாதன தர்மம். பல மொழிகள் பேசலாம். உணவு பழக்கங்கள், உடைகள் அணியலாம். வழிபாட்டு முறைகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதுதான் சனாதனம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். நமக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post சமத்துவம்தான் சனாதன தர்மம்: கவர்னர் புதுவிளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Puduvilakkam ,Nagercoil ,RN ,Ravi ,R. N. Ravi ,Thamaraikulam padi ,Kumari district ,Akhilathirattu Amman Udaya Day ,Ayya Way Research Center ,
× RELATED ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்பு