×

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இன்று வரை 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ள போதிலும் சில நாட்களில் அதைவிட அதிகமாக பக்தர்கள் குவிகின்றனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இடம் கிடைக்காதவர்கள் வண்டிப்பெரியார், எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வருகின்றனர். கடந்த சில நாளாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி மிக அதிகமாக 87,736 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே கடந்த 9ம் தேதி 82,045 பேரும், 10ம் தேதி 71,248 பேரும், நேற்று 75 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் தரிசனம் செய்தனர். இந்த மண்டல காலத்தில் 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

The post சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimalai Aiyappan Temple Walk ,Zonal Pooja ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்