×

கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது: கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஆற்றின் கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். “ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக 10,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தார்.

The post கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது: கடலூர் ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : District administration ,Cuddalore Collector ,Cuddalore ,CP Aditya Senthilkumar ,District Collector ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை