×

புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த தமிழ்தலைவாஸ்: முதல் அணியாக அரியானா தகுதி

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 105வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் தமிழ்தலைவாஸ்யு மும்பா அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யு மும்பா 47-31 என வெற்றி பெற்றது. 17வது போட்டியில் 10வது தோல்வியை சந்தித்த தமிழ் தலைவாஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. இன்று இரவு 8 மணிக்கு தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ், இரவு 9 மணிக்கு உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த தமிழ்தலைவாஸ்: முதல் அணியாக அரியானா தகுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Thalaivas ,Pro Kabaddi League ,Ariana ,Pune ,11th ,Steelers ,Bengaluru Bulls ,
× RELATED புரோ கபடி லீக்கில் இன்று குஜராத்-தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா-டெல்லி மோதல்