மதுரை: ரயிலில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டம் முதன்முறையாக மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு துணிகள் மற்றும் கம்பளி போர்வை வழங்கப்பட்டு வருகிறது. இதில் படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகு சலவை செய்யப்பட்டாலும், கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் மற்றும் 30 நாட்களுக்கு ஒருமுறை உலர் சலவை செய்யப்படுகிறது. ஒருவர் பயன்படுத்தும் கம்பளியை சலவை செய்யாமல் மற்றவர் பயன்படுத்தும் சூழலில் இதுகுறித்து பயணிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த சூழலில் சுகாதாரமான கம்பளி போர்வையை வழங்க தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் துணி உரையோடு கம்பளி வழங்கும் திட்டத்தை தொங்கியுள்ளது. துணி உறைகள், கம்பளி போர்வையோடு வெல்குரோ முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது. கம்பளி போர்வையின் சுகாதாரத்தை பேணி உபயோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை வரவேற்கும் பயணிகள் ரயில்வேக்கு நன்றியும் தெரிவித்தனர்.
The post ரயிலில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டம்.. முதன்முறையாக மதுரையில் அறிமுகம் செய்த தெற்கு ரயில்வே!! appeared first on Dinakaran.