×

சிறை கைதிகளுக்கு அடிப்படை கல்வி கற்றதற்கான சான்றிதழ்: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: புழல் சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புழல் தண்டனை சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், சான்றிதழ், பாடப்புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. இதில் தமிழக சிறைத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறை கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சிறைத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை என 9 சிறைகளில் உள்ள சிறைவாசிகள் 1844 பேருக்கு அடிப்படை கல்வி கற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  சிறையிலுள்ள பெண் கைதிகளின் குழந்தைகள் கல்வி கற்று வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் சிறையிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படைக் கல்வி கொடுக்க ஊக்கப்படுத்தவும், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்படும் என கூறினார்….

The post சிறை கைதிகளுக்கு அடிப்படை கல்வி கற்றதற்கான சான்றிதழ்: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Prison and Reform Works ,School Education Department ,School Sara ,Adult Education Movement ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...