- துணை முதலமைச்சர்
- அமைச்சர் அன்பில் மகேஸ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- வி.கே.நகர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பி. அமைச்சர்
- இந்து மதம்
- மத விவகாரங்கள்
- பள்ளிக் கல்வி அமைச்சர் பி. கே.
- சேகர்பபு
- சிலம்பம் போட்டி
- துணை தலைவர்
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் சிலம்பம் போட்டியில் வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம் கவி ஏற்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று (10.12.2024) சென்னை, புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்ற மாபெரும் சிலம்பம் போட்டியில் வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம் கவி அவர்களின் ஏற்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
சென்னை கிழக்கு மாவட்டம் வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் 500 மாணவர்கள் பங்கேற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் போட்டி கழக துணை அமைப்பு செயலாளர், வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த சிலம்பாட்ட போட்டி இரண்டு பகுதிகளாக நடைபெற்று முடிந்தது. அதன் விவரம் வருமாறு. 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 3 மணிவரை சென்னை-600 012, குக் சாலையில் உள்ள விளையாட்டுத்திடலில் போட்டிகள் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த போட்டியினை, சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (10.12.2024 செவ்வாய்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை-600 012, புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு திடலில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., அவர்களின் ஏற்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ப.தாயகம்கவி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிலம்பகலையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்று செல்ல பெரும்வாய்ப்பாக அமைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா ராஜன், பகுதி கழக செயலாளர்கள் செ.தமிழ்வேந்தன், எம்.சாமிக்கண்ணு, 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் எம்.சரவணன், அம்பேத்வளவன், தமிழ்செல்வி சசிகுமார், வட்ட கழக செயலாளர்கள் பரிமளா சுரேஷ், மா.ருத்ரமூர்த்தி, எம்.ஏ.டீக்கா, எம்.இஸட்.அபாய், எம்.தமீம்பாய், பொல்லு டி.சுரேஷ்குமார், எஸ்.புஷ்பராஜ், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், சன்.டிவிவெங்கடேசன், எஸ். சசிகுமார், எஸ்.வெங்கடேசன் மற்றும் பகுதி இளைஞர்அணி அமைப்பாளர்கள் சே.மணிமாறன், பா.பி.தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.