- வேடசந்தூர்
- அருள்செல்வம்
- பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
- தமிழ்த்துறை
- அரசு கலைக் கல்லூரி
- தண்ணீர் பந்தம்பட்டி
- வேடசந்தூர், திண்டிகுல் மாவட்டம்
வேடசந்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளை செல்போனில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் காவல்துறையின் ‘போலீஸ் அக்கா’ அமைப்புக்கு கடந்த 9ம் தேதி புகார் அளித்தனர்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். இதையடுத்து புகார் அளித்த மாணவிகள், பேராசிரியைகளிடம் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் மற்றும் எரியோடு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அனைவரும் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து பேராசிரியர் அருள்செல்வத்தை கல்லூரி முதல்வர் (பொ) கீதா பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
The post வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடித்த பேராசிரியர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.