×

யு மும்பாவை பழிதீர்க்குமா தமிழ் தலைவாஸ்? புரோ கபடி லீக்கில் இன்று மோதல்

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 103வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-29 என குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 18வது போட்டியில் ஜெய்ப்பூருக்கு இது 9வது வெற்றியாகும். 11வது தோல்வியை சந்தித்த குஜராத் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரூ புல்ஸ் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் 44-29 என 5வது வெற்றியை ருசித்தது. பெங்களூரு 14வது தோல்வியை சந்தித்தது.

இன்று இரவு 8 மணிக்கு முதலிடத்தில்உள்ள அரியானா ஸ்டீலர்ஸ், கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு மோதுகின்றன. இரவு 9 மணிக்கு தமிழ்தலைவாஸ்-யு மும்பாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 16 போட்டியில் 6 வெற்றி, 9 தோல்வி, ஒரு டை என 38 புள்ளியுடன் 9வது இடத்தில் உள்ள தமிழ்தலைவாஸ் , பிளேஆப் சுற்றுக்குள் நுழைய மீதமுள்ள 6 போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 12 முறை மோதியதில் யு மும்பா 8, தமிழ்தலைவாஸ் 3ல் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த சீசனில் கடந்த 14ம்தேதி மோதிய போட்டியில் யு மும்பா வென்ற நிலையில் அதற்கு தமிழ்தலைவாஸ் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

The post யு மும்பாவை பழிதீர்க்குமா தமிழ் தலைவாஸ்? புரோ கபடி லீக்கில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Pro Kabaddi League ,Pune ,11th Pro Kabaddi League Series tournament ,Jaipur Pink Panthers ,Gujarat Giants ,Tamil Thalawaz ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடரில் 5வது அணியாக...