திருவாரூர், டிச. 11: திருவாரூர் சமூக நல துறையின் கீழ் இயங்கும் சேவை மையத்திற்கு தற்காலிக அடிபடையில் பணிபுரிய விருப்புமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் சுழற்சி முறையில் மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில், பணிபுரிவதற்கு ஒரு பாதுகாவலர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
இதற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் விருப்பமுள்ள மகளிர்கள் ஒரு வெள்ளை தாளில் தங்களது பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், பிறந்த தேதி, இனம், கல்வி சான்று இருப்பின் அதன் நகல், அலுவலகங்களில் பணிபுரிந்த அனுபவம் சான்று இருப்பின் அதன் நகல், ஆதார் அட்டை நகல், சுழற்சி முறையில் பணிபுரிவதற்கு தன்விருப்ப கடிதம் ஆகியவைகளுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர் 610004 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் வரும் 17ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.