×

காவேரி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி: நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பங்கேற்பு

சென்னை: புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வாழ்பவர்களின் சக்தியையும், மீட்சித்திறனையும் கவுரவிக்கும் விதத்திலும் காவேரி மருத்துவமனை சார்பில் “பௌல் அவுட் கேன்சர் 2024” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடந்தது. காவேரி மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் தைரியத்துடனும், துடிப்புடனும் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழும் ஆண் நபர்களுக்கு இடையிலான நட்புறவு போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு குறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்கள் நலமுடன் இத்தகைய ஒரு நிகழ்வில் பங்கேற்பதை நேரில் காண்பது எங்களது மனங்களை மகிழ்ச்சியாக்கியது. புற்றுநோய் மீது அவர்கள் கண்ட வெற்றிகளை அங்கீகரித்து பாராட்டும் விதத்தில் இந்த கிரிக்கெட் போட்டியை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.

காவேரி மருத்துவமனையில், வெறுமனே சிகிச்சை செயல்பாட்டில் மட்டும் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதோடு நின்று விடாமல் அவர்களது குணமடையும் பயணத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஆதரவளித்து அவர்களது வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்ய உதவுவதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். விளையாட்டு மைதானத்தில் நடந்த இப்போட்டியின்போது புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களின் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஆனந்தத்தை நேரில் காண கிடைத்த இந்த வாய்ப்பு ஒரு அற்புதமான அனுபவமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவேரி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி: நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : awareness ,Kaveri Hospital ,Chennai ,Bowl Out Cancer 2024 ,Dinakaran ,
× RELATED நீரிழிவு சிக்கல்களை நிர்வகிக்கும்...