×

டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் கண்ணாடி அரண்மனை: வீடியோ வெளியிட்டது பா.ஜ

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கண்ணாடி அரண்மனையில் வசித்ததாக வீடியோ வெளியிட்டு பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி பாஜ மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு கூறியிருப்பதாவது: சாதாரண மனிதர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கண்ணாடி அரண்மனையைப் பற்றி நாங்கள் உங்களுக்கு உண்மையைச் சொல்லி வருகிறோம். இன்று அதை உங்களுக்கும் காட்டுகிறோம். அவர் 7-ஸ்டார் அரண்மனை கட்டியுள்ளார்.

பொது மக்கள் பணத்தை அபகரித்து தனக்காக ரிசார்ட் தயார் செய்துள்ளார். ஜிம், குளியல் அறை, ஓய்வறை, மார்பிள் விளக்கு என அசத்தியுள்ளார். இதை அங்கே அமைப்பதற்கு மட்டும் அவர் ரூ. 3.75 கோடி செலவிட்டு டெல்லியின் வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்துள்ளார். இந்த தொகையில் டெல்லியின் சாமானியர்களான டி.டி.ஏ 34 இடபிள்யூஎஸ் பிளாட் அல்லது 15 எல்ஐஜி பிளாட் அல்லது 150 சின்ஜி ஆட்டோ அல்லது 326 இ ரிக்‌ஷா வாங்கலாம். அற்புதம் கெஜ்ரிவால். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் கண்ணாடி அரண்மனை: வீடியோ வெளியிட்டது பா.ஜ appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,BJP ,New Delhi ,Chief Minister Kejriwal ,Delhi BJP ,president ,Virendra Sachdeva ,Arvind Kejriwal ,
× RELATED டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி...