சென்னை: தங்கம் விலையில் நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து தினம், தினம் புதிய உச்சத்தை கண்டது. இதன் ஒரு பகுதியாக தீபாவளி அன்று (அக்டோபர் 31ம் தேதி) ஒரு சவரன் தங்கம் ரூ.59,640க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை கண்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வார இறுதியில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.56,920க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,205க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,004க்கு விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை திடீரென அதிகரித்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது appeared first on Dinakaran.