×

OCCRP தொடர்பான செய்தியை அரசியலுக்கு பயன்படுத்துவதாக புகார்: பாஜகவுக்கு எதிராக பிரான்ஸ் ஊடகமான மீடியாபார்ட் பரபரப்பு அறிக்கை

டெல்லி: பாஜக போலி செய்திகளை பரப்பி வருவதாக பிரான்ஸ் ஊடக நிறுவனமான மீடியாபார்ட் குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் அதானி விவகாரம் தொடங்கி தற்போது உள்ள பத்திரிகை சுதந்திரம் வரையிலான குற்றச்சாட்டுகளை OCCRP என்ற புலனாய்வு பத்திரிகையாளர்களின் உலகளாவிய அமைப்பு அறிக்கையாக வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், OCCRP அமைப்புக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை மறைமுக தொடர்பு இருப்பதாக மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியை பாஜக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், தங்கள் வெளியிட்ட புலனாய்வு கட்டுரையை வைத்து பாஜக அரசியல் செய்வதாக மீடியாபார்ட் ஊடக நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாஜக-வின் செயல்பாடு பத்திரிகை சுதந்திரத்தை பறித்து ஊடகத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தங்களை ஒரு கருவி போல பாஜக பயன்படுத்துவதாகவும் மீடியாபார்ட் இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு மறுத்த நிலையில், தற்போது பிரான்ஸ் ஊடக நிறுவனமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post OCCRP தொடர்பான செய்தியை அரசியலுக்கு பயன்படுத்துவதாக புகார்: பாஜகவுக்கு எதிராக பிரான்ஸ் ஊடகமான மீடியாபார்ட் பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : OCCRP ,MediaPart ,BJP ,New Delhi ,Adani ,Dinakaran ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...