×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்ட பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் முக்கியத்துவம் பெற்ற நகரமாக திகழ்ந்து வரும் சென்னை மாநகராட்சியில் பாலங்கள், சாலைகள், மேம்பாட்டு திட்டங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு நாள்தோறும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் மக்கள் உடல்நலம் பேணும் வகையில் 8 புதிய விளையாட்டுத் திடல்கள், புனரமைக்கப்பட்ட 2 நீர்நிலைகள், மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கிற்கான 2 புதிய பூங்காக்கள், புதிய பள்ளிக் கட்டிடம் மற்றும் சுகாதார மைய கூடுதல் கட்டிடம், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் என ரூபாய் 29.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் 12 நீர்நிலைகளைப் புனரமைத்தல், மெரினா கடற்கரையில் நீலக் கொடி கடற்கரை திட்டம், 3 மழைநீர் வடிகால் பணிகள், 291 அம்மா உணவகங்களின் மேம்பாட்டு பணிகள், 10 புதிய ஆரோக்கிய நடைபாதைகள், 3 சமூக நல மையங்கள் கட்டும் பணி, செவிலியர் மற்றும் பெண்கள் தங்கும் விடுதி, 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், சைதாப்பேட்டை காய்கறி மற்றும் பழங்கள் சந்தை, 3 இடங்களில் சென்னை நகர நுழைவுக்கான சாலை பெயர்ப் பலகைகள், 3 நடைபாதைகள் மேம்படுத்துதல், 7,644 தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகள், 148 பள்ளிக்கூடங்களை சீரமைத்தல், 12 கால்நடை கொட்டகைகள் அமைக்கும் பணிகள், நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் என ₹279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 106 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அத்துடன், மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 453 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், வேலு, பரந்தாமன், நா.எழிலன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, வெற்றி அழகன், எபினேசர், பிரபாகர் ராஜா, கணபதி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் முக்கியத்துவம் பெற்ற நகரமாக திகழ்ந்து வரும் சென்னை மாநகராட்சியில் பாலங்கள், சாலைகள், மேம்பாட்டு திட்டங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு நாள்தோறும் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ₹279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ279.50 கோடி மதிப்பில் 493 புதிய திட்ட பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Chennai Corporation ,India ,Dinakaran ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....