×

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று(10ம் தேதி) சற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும். மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

12 முதல் 20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் டிச.11, 12 ஆகிய 2 நாட்களுக்கு ஆசஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal ,Meteorological Survey Center ,CHENNAI ,BANGKOK SEA ,South East Bank Sea ,Bangladesh ,Dinakaran ,
× RELATED சென்னை உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணி...