×

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா (வயது 92) பெங்களூருவில் காலமானார். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. 92 வயதான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். 1998-2004 ஆம் ஆண்டுகளில் கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மகாராஷ்டிர மாநில ஆளுநராக 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.

எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவு அமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 2017ல் காங்கிரஸ் கட்சியிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 2023ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 92 வயதான எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வந்த நிலையில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

The post கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former ,Karnataka ,Chief Minister ,SM Krishna ,Bengaluru ,Mandya District, Karnataka ,Chief Minister of Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்