×

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் திருடிய 2பேர் கைது

ஆத்தூர், டிச.10: ஆத்தூர் அருகே கோட்டை சந்தனகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(40). பொக்லைன் ஆபரேட்டர். கடந்த பிப்ரவரி மாதம், இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 5 பவுன் நகையை திருடிச் சென்றனர். இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன் (34), தென்காசி மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்த மாரியப்பன்(42) ஆகிய இருவரும் வீட்டில் நகை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5பவுன் நகையை மீட்டனர். போலீசார் விசாரணையில், மாரியப்பன் மீது திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், கரூர், தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இருவரையும், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் திருடிய 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,Venkatesan ,Fort Chandanagiri ,Attur ,Dinakaran ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்