- சக்தி காந்த தாஸ்
- ஆர்பிஐ
- கவர்னர்
- சஞ்சய் மல்கோத்ரா
- புது தில்லி
- சக்தி காந்த தாஸ்
- ரிசர்வ் வங்கி
- அமைச்சரவை நியமனக் குழு
- யூனியன் வருவாய்
- சஞ்சய் மல்ஹோத்ரா
புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து புதிய கவர்னர் நியமனம் குறித்து அமைச்சரவை நியமனக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா வயது 56. அவர் ரிசர்வ் வங்கியின் 26வது கவர்னராக நாளை பதவியேற்கவுள்ளார்.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டதாரியான இவர், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 33 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியில் உள்ள அவர் மின்சாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கங்கள் உட்பட பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது, நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். இன்று ஓய்வு பெறும் 67 வயதான சக்திகாந்த தாஸ், தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2018 டிச.12ல் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்த பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது.
The post சக்திகாந்ததாஸ் இன்று ஓய்வு ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா appeared first on Dinakaran.