×

12வது சுற்றில் குகேஷ் தோல்வி

சிங்கப்பூர்: ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12வது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனும் சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மோதினர். இப்போட்டியில் கருப்புக் காய்களுடன் ஆடிய குகேஷ் 39 நகர்த்தலுக்கு பின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால், இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர். இன்று ஓய்வு நாள். நாளையும், மறு நாளும் நடக்கும் அடுத்த இரு சுற்றுகளில் 1.5 புள்ளிகள் கூடுதலாக பெறுபவர் உலக சாம்பியன் பட்டம் வெல்வார்.

The post 12வது சுற்றில் குகேஷ் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Gukesh ,Singapore ,Grandmaster ,Ding Liren ,FIDE World Chess Championship ,Dinakaran ,
× RELATED குகேஷ்- லிரென் செஸ் 13வது சுற்று டிரா: இன்று இறுதிச் சுற்று